உள்நாடு

மாணவர்கள் போதைபொருள் பாவனை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV|கொழும்பு) – பாடசாலைகளை அண்டியதாக போதை பொருள் பாவனை குறித்து அறிவிப்பதற்கு 0777 128 128 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகளை அண்டியதாக போதை பொருள் கடத்தல்களை தடுக்கும் வேலைத்திட்டம் பாதுகாப்பான நாளைய தினம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதால் நீண்ட நேரம் கண்விழிக்க முடியும். சமிபாட்டு சக்தி அதிகரிக்கும், சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும், பாலியல் ரீதியான கவர்ச்சி கிடைக்கும் மற்றும் பாலியல் சக்தி அதிகரிக்கும் போன்ற விடயங்கள் மாணவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளன. அவை முற்றிலும் பொய் என்பதை மாணவர்களுக்கு அறியத்தர விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related posts

காத்தான்குடி Dr.பெனாசிர் ஜாமில் தோல் வைத்திய நிபுணருக்கான பரீட்சையில் சித்தி!

editor

 புதுக்கடை நீதவான் நீதி மன்றின் முன்னாள் ஆர்ப்பாட்டம் (video)

சிலாபம், தெதுறு ஓயாவில் காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்பு

editor