வகைப்படுத்தப்படாத

மாணவர்கள் சீன மொழியில் பேச எதிர்ப்பு – பல்கலைக்கழக பேராசிரியை நீக்கம்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் சீன மொழியில் பேச எதிர்ப்பு தெரிவித்த உதவி பேராசிரியை மெகன் நீலி ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் சீனாவை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு, “மாணவர்கள் யாரும் சீன மொழியில் பேச வேண்டாம். ஆங்கிலம் உங்களுக்கு அந்நிய மொழி என்பது எனக்கு புரிகிறது. ஆனால், அதனை மேம்படுத்திக் கொள்ள முயலுங்கள். தேவையற்ற விளைவுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” என மெகன் நீலி சமீபத்தில் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளதுடன், குறித்த மின்னஞ்சல் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது.

மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதனை தொடர்ந்து, ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனர் பதவியில் இருந்து மெகன் நீலி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஹவாய் பகுதியில் வெடித்து சிதறிய எரிமலை

IAEA chief Yukiya Amano dies at 72

மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிப்பு