உள்நாடு

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

(UTV|முல்லைத்தீவு ) – முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் எலும்புக்கூடுகள் சில மீட்கப்பட்டுள்ளன.

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புனர்வாழ்வு பிரிவிற்கான கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ள இடத்திலேயே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிக்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, நாளைய தினம் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் தற்போது இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் காணப்படக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நீதவானின் உத்தரவிற்கு அமைய, எலும்புக்கூடுகள் காணப்படும் பகுதியில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

குருநாகல் – மீரிகம பகுதிக்கு பிரதமர் திடீர் கண்காணிப்பு விஜயம்

புத்தளம் நகர சபையின் தலைவர் மரணம் : மூவர் கைது

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரிப்பு