உள்நாடு

மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்திற்கு மாணவர்கள் இணைப்பு!

மாகொல முஸ்லிம் அநாதை நிலையம், சமூகத்திற்கு 63 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை வழங்கும் ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும்.

1962 இல் நிறுவப்பட்ட இந்நிலையம், இலங்கையில் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் அநாதை இல்லங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

எங்கள் நோக்கம், முஸ்லிம் அநாதைக் குழந்தைகளின் வாழ்வை மேன்படச்செய்வதாகும்.

உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாம், குழந்தைகளுக்கு வழங்கும் சேவைகளாவன:

•ஒரு பாதுகாப்பான மற்றும் அன்பான சூழல்: அவர்கள் கண்ணியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளரக்கூடிய ஓர் இடம்.
•முழுமையான கல்வி வாய்ப்பு :

  1. அல்-குர்ஆன் மனனம் (ஹிஃப்ழ் பிரிவு)
  2. மார்க்கக் கல்வி (Religious Education): அன்வாருல் உலூம் அறபுக்கல்லூரி மூலம் அல் ஆலிம் மற்றும் மௌலவி சான்றிதல்களுக்கான கற்கைநெறி வழங்கப்படுவதோடு, க.பொ.த சாதாரண, உயர்தர வகுப்புகளும் நடாத்தப்படும்.
  3. பாடசாலைக் கல்வி (Secular Education): அரசுப் பள்ளிப் பாடத்திட்டதிற்கமைய தரம் 1 முதல் க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் வரையான ஆங்கில, தமிழ் மொழிக்கல்வி (Tamil, English Mediom).
  4. தொழிற்கல்வி: தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம் (ICT) Electrical wiring, Plumbing.
    •ஆன்மீக வழிகாட்டல்: புனித குர்ஆன் மற்றும் சுன்னாவின் போதனைகள் அடிப்படையிலான ஒரு வளர்ப்பு முறை.

•இலவச உணவு, உடை, தங்குமிட வசதி, கற்றல் உபகரணங்கள், மருத்துவ சேவைகள், வருடாந்த கல்வி சுற்றுலா, கல்வித்தவனை விடுமுறைகள்.

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்

  1. தந்தை மரணித்த முஸ்லிம் ஆண் சிறுவர்கள்.
  2. 6 முதல் 12 வயதெல்லைக் குட்பட்டவர்கள் .
    தேவையான ஆவணங்கள்
  3. பிறப்புச் சான்றிதழ் (மூலப்பிரதி)
  4. தந்தையின் மரணச் சான்றிதழ் (மூலப்பிரதி)
    விண்ணப்பப் படிவத்தை மாகொலையில் அமைந்துள்ள எங்கள் நிர்வாக அலுவலகத்திலோ அல்லது நேர்முக ப்பரீட்சையன்றோ பெற்றுக்கொள்ளமுடியும்.

விண்ணப்ப முகவரி:
The Secretary,
Makola Muslim Orphanage,
Haji Fathima Garden,
Makola North, Makola.
📞 0773 911 852 | 0772 386 305
✉️ yathama@slt.lk
www.yathama.com

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 45 பேர் கைது

´சிட்டி பஸ்´ அமுலுக்கு

பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி