கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பி.எஸ்.என்.விமலரத்ன சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (16) விஜயம் மேற்கொண்டார்.
வைத்தியசாலையின் சில பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்ட அவர் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் தொகுதியினையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை நிர்வாகத்தினர், உத்தியோகத்தர்கள், ஊழியர்களையும் சந்தித்த மாகாணப் பணிப்பாளர், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து உரிய தீர்வுகளையும் வழங்கினார்.
குறிப்பாக இதன்போது சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தின் கழிவு முகாமைத்துவம் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டீ.பிரபாசங்கர், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உட்பட சம்மாந்துறை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
-றியாஸ் ஆதம்