சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்- பெஃப்ரல் அமைப்பு

(UTV|COLOMBO)-மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் விரைவில் பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தவிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

6 மாகாண சபைகளின் அதிகாரக் காலம் நிறைவடைந்துள்ளது.

எனினும் அவற்றுக்கான தேர்தல், மாகாண எல்லை மறுசீரமைப்பு அறிக்கை குறித்த மீளாய்வுப் பணிகள் தாமதித்துள்ளமையால், நடத்தப்படாதுள்ளது.

இந்தநிலையில் பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள மீளாய்வுக் குழு தமது அறிக்கையை 2 மாதங்களுக்குள் கையளிக்க வேண்டும் என்றும் பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

 

 

 

Related posts

பிற்போடப்பட்ட சந்திப்பு இன்று(03) இரவு

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பம்…(நேரலை)

பஷில் ராஜ­பக்ஷவினால் இந்த பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும் : பசிலை சந்தித்த நசீர் அஹமட்