மாகாண சபைத் தேர்தல் தாமதமின்றி நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ள பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பாராளுமன்ற சபை அமர்வில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட கேள்வியானது இன்று வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்ற சபை அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே துறைசார் அமைச்சரினால் மேற்படி பதில் வழங்கப்பட்டிருக்கிறது.
-அஸ்லம் எஸ்.மெளலானா