உள்நாடு

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கம்

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர். ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடையானது இம்மாதம் 21 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும், அதை நீடிப்பது தொடர்பில் கொவிட் செயலணி தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை தனது எல்லைகளை திறக்கும் என்றும்,நாட்டை திறக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

MV-Xpress pearl கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில்

புதிய கோப் மற்றும் கோபா உறுப்பினர்கள் இன்று அறிவிக்கப்படலாம்

இன்றும் நாளையும் நீர் வெட்டு