உள்நாடு

மாகாணங்களுக்கு இடையில் 5 ரயில்கள் சேவையில்

(UTV | கொழும்பு) – கொவிட்-19 பரவல் காரணமாக ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்று முதல் மேலதிகமாக 5 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக தமது அடையாளத்தை உறுதிபடுத்தி பயணிகள் ரயிலில் பயணிக்க முடியும் என அந்த சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதன்படி முற்பகல் கண்டி, மஹவ, சிலாபம் ஆகிய பிரதேசங்களிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இந்த ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.

அத்துடன் போலவத்தையிலிருந்து புத்தளத்திற்கு இடையிலும் பெலியத்தையிலிருந்து மருதானை வரையும் இவ்வாறு மேலதிகமாக 5 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க திட்டம்

சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக ஜே.வி.பி இன்று ஆர்ப்பாட்டத்தில்

சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு