உள்நாடு

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் பரவல் நிலைமை அதிகரித்து வந்ததன் காரணமாக மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதேவேளை, தற்போதைய நடமாட்டக்கட்டுப்பாடு தளர்வுகள் நாளை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, 19ஆம் திகதியின் பின்னரே மீளவும் பயணக்கட்டுப்பாடு விதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மன்னார் போராட்டம் 47வது நாளாக தொடர்கிறது

editor

தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

பொருளாதாரத்தை முறையாக மாற்றியமைக்க மக்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் முக்கியம் – ஜனாதிபதி அநுர

editor