சூடான செய்திகள் 1

மஹிந்த உட்பட முன்னாள் அமைச்சரவைக்கு எதிரான மனு வாபஸ்…

(UTV|COLOMBO) மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு சம்பந்தமான மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபெசெகர முன்னிலையில் இன்று(12) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில்,
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் ​தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி குறித்த மனுவை வாபஸ் பெறுவதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

SLT “Voice App”அறிமுகம்

கோட்டாவுக்கு எதிரான எவன்கார்ட் வழக்கு ஒத்திவைப்பு

மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்ட ராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டிருந்த நபர்