வகைப்படுத்தப்படாத

மஹிந்த ஆதரவு அணியினரின் மே தினக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு தண்டனை இல்லை!

(UDHAYAM, COLOMBO) – காலி முகத்திடலில் இடம்பெற்ற மஹிந்த ஆதரவு அணியினரின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற தமது கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டி கெட்டம்பேயில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிலையில், காலி முகத்திடலில் இடம்பெற்ற மஹிந்த ஆதரவு அணியினரின் மே தினக் கூட்டத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில், கட்சியை ஒன்றிணைக்கும் செயற்பாட்டைக் கருத்திற்கொண்டு, குறித்த தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் எஸ். பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்பு

Favreau reveals one real “Lion King” shot

காணாமல் போன MH370 மலேசிய விமானத்தின் மர்மம்-5 வருட நினைவு கூறல்