வகைப்படுத்தப்படாத

மஹிந்த அமரவீர சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு

(UTV|COLOMBO)-யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீரவை மீண்டும் கொழும்பிற்கு அழைத்து வர இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை  விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் அமைச்சர் மஹிந்த அமரவீர யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பலாலி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் போனதாகவும் சிறிது நேரத்தின் பின்னரே தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாம் மீண்டும் கொழும்பிற்கு செல்வதற்கு விமானப்படையினரின் விமானத்தினை வழங்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர முன்வைத்த கோரிக்கை அமைய இலங்கை விமான படையினரின் விமானம் வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் கிஹான் செனவிரத்ன  தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

No evidence to claim IS linked to Easter Sunday attacks – CID

வித்தியா மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Bankers sent home as Deutsche starts slashing jobs