சூடான செய்திகள் 1

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிரான மனு ஜனவரியில் விசாரணைக்கு

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஜனவரி 16, 17 மற்றும் 18ம் திகதிகளில் அந்த மனுவை விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

 

 

 

 

Related posts

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

350 சுகநல உணவகங்களை அமைப்பதற்கு சமுர்த்தி திணைக்களம் நடவடிக்கை

சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு