ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் சுயேட்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பரமசிவம் ராஜ்குமார் தெரிவு செயயப்பட்டுள்ளார் .
மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவிற்கான கன்னி அமர்வு மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் ஏ.சி.கே அத்தபத்து தலைமையல் மஸ்கெலியா அச்சனிக்கா ஹோட்டலில் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இன்றைய கூட்டத்தில் 17 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
திறந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தெரிவுகள் இடம் பெற்றன. அதற்கமைவாக சுயேட்சைக்குழு உறுப்பினர் தவிசாளராக போட்டியிட்ட கந்தையா ராஜ்குமார் 9 வாக்குகள் கிடைக்கப்பெற்று தவிசாளராக செய்யப்பட்டார்
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட ஆசீர்வாதம் எவிஸ்டன் 08 வாக்குகளை பெற்றார்.
உப தவிசாளர் பதவி எந்தவித போட்டியும் இன்றி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பரமசிவம் ராஜ்குமார் தெரிவு செய்யப்பட்டார் .
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பை கோரியதுடன் மரண அச்சுறுத்தல் இருப்பதாக மகஜர் ஒன்றினை ஆணையாளரிடம் கையளித்த நிலையில் அமலிதுமளி இடம்பெற்றதுடன் எவ்வாறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது இதில் திறந்த வாக்கெடுப்புக்கு 09 வாக்குகளும் இரகசிய வாக்கெடுப்பிற்கு 08 வாக்குகளும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
-இராமச்சந்திரன்