வகைப்படுத்தப்படாத

மஸ்கெலியாவிலிருந்து கதிர்காமத்திற்கு பக்தர்கள் பாத யாத்திரை

(UDHAYAM, COLOMBO) – கதிர்காமம் முருகன் ஆலய கொடியேற்றத்தில் கலந்துகொள்ள மலையகத்திலிருந்து யாத்திரிகள் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர் மஸ்கெலியா பிரதேச யாத்திரிகள்

13.07.2017   மஸ்கெலியா ஸ்ரீ சன்முகநாதர் ஆலய வழிபாட்டின் பின் பாத யாத்திரையை ஆரம்பித்தனர்.

400 கிலோ மிட்டர் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் நுவரெலியா பதுளை வெள்ளவாய வழியாக புத்தள காட்டினூடாக. கதிர்கமத்தை சென்றடையும் பக்தர்கள் நாளொன்றுக்கு   40 கிலோ மீட்டர் தூரம் நடந்துசெல்லவுள்ளனர்.

இரவு நேரங்களில் ஆலங்களிலும் விகாரைகளிலும் தங்குவதாக தெரிவித்த யாத்திரிகள் 23.07.2017 இடம்பெறவுள்ள கொடியேற்றத்திற்கு முதல் நாள் கதிர்காமத்தை சென்றடையவுள்ளதாக தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்?

தொடரும் விபரீதங்கள் : சுயப்படம் எடுக்கச்சென்று மேலும் ஒரு இளைஞர் பலி

PSC on Easter attacks to convene tomorrow