கிங் மற்றும் நில்வளா கங்கைகளை அண்மித்த பகுதிகளில் சிறியளவில் வெள்ளம் ஏற்படும் சாத்தியமுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த நிலைமை ஏற்ப்பட்டுள்ளது.
இதனால் குறிப்பிட்ட பிரதேச செயலகங்களைச் சேர்ந்த மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிங் கங்கை : நெலுவ, தவலம, நாகொட, நியாகம, வெலிவிட்டிய-திவிதுர, எல்பிட்டிய மற்றும் அக்மீமன ஆகிய பகுதிகள்.
நில்வளா கங்கை : பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புறுபிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பகுதிகள்.
இதேவேளை நீர்மட்டம் உயர்வடைந்ததால் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாட்களில் நாட்டின் மழை நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
