சூடான செய்திகள் 1

மழை அல்லது இடியுடன் கூடிய மழை….

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

 

 

Related posts

கல்முனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பில்லை

முஹம்மத் முஸம்மில் இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்திற்கு

கத்தான்குடியில், சஹ்ரானின் குடும்பத்தினர் 30 பேர் ஒரே வீட்டில் கைது!