உள்நாடு

மழையுடனான வானிலை மேலும் தொடரும்

(UTV | கொழும்பு) – இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக, மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த, நளின் வெலிக்கடை சிறையில் – ஜம்பர், பாய், தலையணை வழங்கப்பட்டது

editor

சாரதி அனுமதிப் பத்திரங்களில் புதிய மாற்றம்

“சிறிய நாடுகள் காணாமல் போகும் மந்தநிலை உருவாகிறது”