சூடான செய்திகள் 1

மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்…

(UTV|COLOMBO) அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்திலும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

Related posts

இலஞ்சம் பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் கைது

மந்த போஷணத்தை இல்லாதொழிப்பதற்கு கொள்கையொன்று அவசியம் -சஜித்

ஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்? கிரிக்கெட் வாரியம் திட்டம்