சூடான செய்திகள் 1

மழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்கும் சாத்தியம்

(UTV|COLOMBO)-நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல், மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

Related posts

வாகன சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான எழுத்து மூல பரீட்சையில் மாற்றம்

சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு…

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் முஸம்மில் – சஜித்திற்கு ஆதரவு.

editor