தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 34 பிரதான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருகின்றன.
அநுராதபுரம் மாவட்டத்தில் கலாவெவ, ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலன்னறுவை மாவட்டத்தில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகளில் ஒன்று நேற்று இரவு திறக்கப்பட்டது.
இதன் மூலம் விநாடிக்கு 1,500 கன அடி நீர் அம்பன்கங்கைக்கு வெளியேற்றப்படுகிறது.
கண்டி மாவட்டத்தில் பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் கொண்டுவட்டுவான் குளம் வான்பாய்வதனால் அம்பாறை – இங்கினியாகலை வீதி நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
