வகைப்படுத்தப்படாத

மல்லாகத்தில் கடத்தப்பட்ட மாணவி, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிப்பு

(UDHAYAM, COLOMBO) – யாழ். மல்லாகம் பகுதியில் வைத்து ஹயஸ் வாகனத்தில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, இரண்டு மணித்தியாலங்களின்

பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சி வரணிப் பகுதியில் வேனிலிருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில், பொதுமக்களால் மாணவி மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மல்லாகம் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயது மாணவி, பாடசாலைக்கு நடந்த செல்லும் வழியில் இன்று காலை 7.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.

ஹயஸ் வாகனத்தில் வந்த அறுவர் கொண்ட குழுவினரால் மாணவி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், தென்மராட்சிவரணிஅம்மா கடைப் பிரதேசத்தில் வைத்து வானிலிருந்து தள்ளிவிடப்பட்ட மாணிவி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாகம் மற்றும் சாவகச்சேரி காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts

புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை – பிரதமர்

SLFP to discuss SLFP proposals today

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரிப்பு