சூடான செய்திகள் 1

மலையக ரயில் போக்குவரத்து தாமதம்

(UTV|COLOMBO)-மலையக ரயில் பாதையின் போக்குவரத்து இதுவரை சீராகவில்லையெனவும், இதனைச் சரிசெய்ய இன்னும் கால அவகாசம் தேவைப்படும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்தள்ளது.

நேற்றிரவு (05) பண்டாரவெல அருகிலுள்ள கிணிகம மற்றும் ஹீல்கம ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மண் மேடொன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நேற்றிரவு பதுளையிலிருந்து கொழும்பு வரை பயணிக்கவிருந்த இரவு தபால் ரயில் ஹீல்ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், கொழும்பிலிருந்து  பதுளை வரை பயணிக்கும் ரயில் போக்குவரத்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

 

 

 

 

Related posts

லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு பூட்டு

படைவீரர் நடைபவணி இராணுவ தளபதியின் தலைமையில் ஆரம்பம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு