உள்நாடு

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

(UTV | கொழும்பு) – கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில், வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று(11) காலை தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக, மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த ரயிலை தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உடனடியாக கொண்டுவர வேண்டும் – மனோ கணேசன் எம்.பி

editor

சீரற்ற காலநிலை – பல பகுதிகளில் வாகன போக்குவரத்து பாதிப்பு

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்