அரசியல்உள்நாடு

மலையக மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரவிடம் ஜீவன் எம்.பி கோரிக்கை

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

கொட்டகலை, லொகி தோட்டப் பகுதியில் நேற்று (08) வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்,

“ஒவ்வொரு குடும்பங்களுக்கும் சொந்தக் காணிகள் இருக்கும் பட்சத்தில் எமது வாழ்க்கைத்தரம் உயர்வடையும்.

தேர்தல் காலங்களில் நாம் சலுகைகளை நம்பிப் பின்னால் சென்றுகொண்டிருக்கின்றோம்.

அனைவருக்கும் வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்வதென்பது சாத்தியமற்ற விடயம்” எனவும் தெரிவித்தார்.

-சதீஸ்குமார்

Related posts

தபால் வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில்

editor

பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையம் வைத்தியசாலையாக மாற்றம்