உள்நாடுசூடான செய்திகள் 1

மலையக கட்சிளுக்கும் ஜனாதிபதி ரணிலுக்குமிடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு!

(UTV | கொழும்பு) –

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளி மலையக கட்சிளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பை நடத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கலந்தாலோசனையின் பின்னர், குறித்த சந்திப்பு எப்போது இடம்பெறும் என்ற திகதியை தெரிவிப்பதாக ஜனாதிபதி செயலகம் தனக்கு அறிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 12ஆம் திகதி நுவரெலியாவில், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ‘மலையகம் – 200’ தொடர்பில் நடத்தவுள்ள, ‘நாம் இலங்கையர்’ பேரணி காரணமாக, கூட்டணி எம்.பிக்கள் 11ஆம் திகதி கொழும்பில் இல்லாத காரணத்தாலும், 10ஆம் திகதி, பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்வைத்துள்ள முழுநாள் விவாதம் காரணமாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே அப்படி பேசினேன் – அர்ச்சுனா எம்.பி

editor

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அரச நாடக விருது விழா!

நெடுந்தீவில் சுற்றுலா பயணிகளுடன் கடலில் மூழ்கிய படகு – 14 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு

editor