உள்நாடு

மலையகத்தில் பிரமாண்டமான பொங்கல் விழா !

(UTV | கொழும்பு) –

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் நாளை நடைபெறும் தேசிய தைப்பொங்கல் விழா, 1008 பொங்கல் பானை வைக்கப்பட்டு, தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடன் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

அத்துடன், கோலப்போட்டி, தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்டம் உட்பட பாரம்பரிய போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் நடைபெறும் விழாவில் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார்.

வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், மக்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். தென்னிந்தியாவில் இருந்து கலைஞர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
மலையக வரலாற்றில் இம்முறையே 1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய பொங்கல் விழா நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor

பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நிறுவனம் சுற்றிவளைப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில்

editor