உள்நாடுகாலநிலைபிராந்தியம்

மலையகத்தில் கடும் மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது.

இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் இன்று (19) காலை முதல் நிரம்பி வழிகின்றது.

அத்துடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

எனவே, தாழ்நிலப் பகுதிகளில் வாழ்பவர்கள் விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் முறையிட அறிமுகமான தொலைபேசி இலக்கம்!

கொவெக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 82 பேர் வெளியேறியுள்ளனர்