உள்நாடுபிராந்தியம்

மலையகத்தில் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

நேற்று இரவு வீசிய கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையால் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்த்துள்ளமையினால் ஒருவழி போக்குவரத்து இடம்பெற்று வருகிறது.

அதே போன்று நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியின் இரண்டாம் கட்டைப் பகுதியிலும் பாரிய மரமொன்று வீதியில் வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.

கடும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை நிலவி வருகின்றமையினால் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதுடன் வீதிகள் வழுக்கல் தன்மை காரணமாக சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

-இராமச்சந்திரன்

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 08 மரணங்கள் பதிவு

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று- வெல்லப்போவது யார்?

கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை