உள்நாடு

மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணை அறிமுகம்

(UTV|COLOMBO) – தற்போது நடைமுறையில் உள்ள கொழும்பு – கண்டி ரயில் சேவை கால அட்டவணைக்கு மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணையை இந்த வாரம் அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை ரயில்வே சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடைமுறையில் உள்ள கால அட்டவணையின்படி வெள்ளிக்கிழமை மாலை 5.20 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் 1033 இலக்கமுடைய ரயில் இனிமேல் வியாழக்கிழமை நாட்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

மேலும், கண்டியில் இருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி அதிகாலை 5.50 க்கு சேவையில் ஈடுபடும் ரயில் வெள்ளிக்கிழமை நாட்களில் அதே கால அட்டவணைக்கு அமைய சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புத்தளத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடலாமைகள்

“சட்டத்தின் மீதான பயம் நீங்கியது”

ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் போக்குவரத்து பாதிப்பு