மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
மாலினி பொன்சேகாவின் பூதவுடல் இன்று (25) தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (26) காலை 8.00 மணிக்கு கொழும்பு 7 சுதந்திர சதுக்க மாளிகைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அங்கு காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
பிற்பகல் 3.30 மணியளவில் அவர் கல்வி கற்ற களனி குருகுலக் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் கலைஞர்களால் பௌத்த மதச் சடங்குகளுக்காக கட்டப்பட்ட விசேட மேடைக்கு அவரது பூதவுடல் கொண்டுச் செல்லப்படவுள்ளது.
பின்னர் மத சடங்குகள் நிறைவுள்ள பின்னர், அவர் திரையுலகுக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் திரைப் பயண வாழ்க்கை குறித்த கலைஞர்களின் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
பிற்பகல் 5.45 மணியளவில் மறைந்த நடிகை மாலினியின் பூதவுடல் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.