வகைப்படுத்தப்படாத

மறைந்த பிரம்மானவத்தே சீவலீ தேரர் தமிழ் மக்களின் உள்ளங்களையும் வென்றெடுத்தவர் – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – அமரபுர மகாசங்க சபையின் பதிவாளர் கலாநிதி பிரம்மானவத்தே சீவலீ தேரரின் மறைவு குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட நாகதீப விகாரையில் நீண்டகாலமாக இருந்து பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் உள்ளங்களையும் அவர் வென்றெடுத்ததாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் சிங்கள மொழிகளில் நூல்களை எழுதி பௌத்த சாசனத்தின் சுபீட்சத்திற்காகவும் தேரர் உழைத்தார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

தமிழ்மொழி நிபுணத்துவம் அறிவும் அவருக்கு இருந்தது. நாக விகாரையை பாதுகாக்க பாரிய அர்ப்பணிப்புக்களை அவர் மேற்கொண்டார் என்றும் பிரரதமர் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Three die in Medawachchiya motor accident

அத்தியாவசிய ஓளடதங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

UTV செயலி Android மற்றும் iphone கைப்பேசி ஊடாக