விளையாட்டு

மறைந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் : அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு

(UTV |  அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் நேற்று காலமானார்.

தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஷேன் வோர்னின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மோரிசன் அறிவித்துள்ளார்.

மேலும், அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களுள் அவரும் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

உலக கட்டழகராக இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ்

பங்களாதேஷ் கடற்படைக்கப்பல் ‘பிஎன்எஸ் பங்கபந்து’ நாடு திரும்பியது

ஐ.பி.எல். போட்டியின் கிண்ணம் – பிரெட்லீ கணிப்பு