உள்நாடு

நீர்க்கசிவு காரணமாக பிரதான வீதிக்கு பூட்டு

(UTV|மன்னார் ) – மறு அறிவித்தல் வரை புத்தளம் – மன்னார் வீதி மூடப்பட்டுள்ளதாக வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் சதுரக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வன்னாத்தவில்லு பழைய எலுவான்குளம் பகுதியில் உள்ள சம்பாத்துப் பாலத்தின் கீழ் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவு காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலத்தின் ஒரு பகுதியில் கலா ஓயாவில் இருந்து வெளியேற்றப்படும் நீரை சேமித்து வைத்த நிலையில், இந்த பாலத்தில் ஏற்பட்ட நீர்க் கசிவு காரணமாக சேமித்து வைக்கப்பட்ட நீர் வெளியேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், புத்தளம் – மன்னார் பாதை உடனான சகல போக்குவரத்துக்களும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்காக மாற்று வழியைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

கோட்டாபயவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி

தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகளுக்குதாமதமற்ற சர்வதேச நீதி வேண்டும் – வலி கிழக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்!

editor

எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு குறித்து இன்று தீர்மானிக்கும்