“வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்” என்ற தொனிப்பொருளின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாவது நாளாக சுற்றாடல் மற்றும் மரநடுகை வேலைத்திட்டம் இன்று (16) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் தலைமையில் நடைபெற்றது.
சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரி, சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் போன்றவற்றில் சுற்றுப்புறத்தை பசுமையமாக்கும் நோக்கில், மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரி, சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சம்மாந்துறை பொலிஸார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றி மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
இவ்வேலைத்திட்டம் அரச திணைக்களங்கள், சிறுவர் பூங்காக்கள், மைதானங்கள், மையவாடிகள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-தில்சாத் பர்வீஸ்