காரைதீவு பிரதேச சபையின் 4 ஆவது சபையின் மூன்றாவது அமர்வு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் சகல உறுப்பினர்களினதும் பிரசன்னத்துடன் இன்று
(17) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய கீதத்துடன் ஆரம்பமான இந்த அமர்வில் மறைந்த முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகருமான எம்.எச்.எம். அஷ்ரஃபுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர் கி. ஜெயசிறில் ஆகியோரால் இரங்கல் உரையும் நிகழ்த்தப்பட்டது.
இதன்போது எம்.எச்.எம். அஷ்ரபுடன் உலங்கு வானூர்தியில் பயணித்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ் பிரமுகர்கள் பலருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலஞ் சென்ற எம்.எச்.எம். அஷ்ரப் தமிழ் மக்களுக்கும், நாட்டுக்கும், காரைதீவு பிரதேச சபைக்கும் காரைதீவு மக்களுக்கும் செய்த சேவைகள், சமூக நல்லிணக்க பணிகள் தொடர்பிலும் நினைவூட்டப்பட்டது.
-நூருல் ஹுதா உமர்
