உள்நாடு

மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் நிறுத்தம்

(UTV|கொழும்பு)- தபால் நிலைய ஊழியர்களின் ஊடாக மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுடன்(15) இடைநிறுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை விடுத்து தபால்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் மருந்துகளை விநியோகிப்பதில் சிரமம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஜனாதிபதி செயலணியின் கோரிக்கைக்கு அமைவாக, அரச வைத்தியசாலைகளினால் மற்றும் அரச மருந்தகங்களின் ஊடாக வழங்கப்படும் மருந்துப் பொருட்களை உரிய தரப்பினருக்கு விநியோகிக்கும் நடவடிக்கை தபால் திணைக்கள ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்விசார் ஊழியர்களுக்கு எதிர்வரும் வாரத்தினுள் தடுப்பூசி

“அங்கஜனுக்கு உயர் பதவியை வழங்கியது” அங்கஜன் இராமநாதன்

மகிந்தவை ஏன் நேரில் சந்தித்தீர்கள் – கரி ஆனந்தசங்கரி அதிருப்தி