உலகம்

மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

(UTV | சுவீடன்) – மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அவ்வகையில் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

2020ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பைடனின் பதவியேற்புடன் பழிவாங்கல் தொடரும்

ஏமன் நாட்டின் மீது சவூதி கூட்டுப்படையினர் தாக்குதல்

உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல் – ஒருவர் பலி – 30 பேர் காயம்

editor