உள்நாடு

மருத்துவ ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் !

(UTV | கொழும்பு) –

நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் இன்று  காலை 8 மணி முதல் அரச வைத்தியசாலைகளில் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ ஊழியர்களின் கூட்டு ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

35  ஆயிரம் ரூபா கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வைத்தியர்களுக்கான Disturbance, Availability and Transport (DAT) கொடுப்பனவை இரட்டிப்பாக்க ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நேற்று அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் படி குறித்த கொடுப்பனவானது 35,000 ரூபாவிலிருந்து 70,000  ரூபாவாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விபத்தில் சிக்கி உயிரிழந்த சருகுப் புலி குட்டி

ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பூநகரி தபாலகம்!