வகைப்படுத்தப்படாத

மருத்துவமனையில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் இந்த தீ விபத்து குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நவாஸ் ஷெரிப் மனைவி குல்சூமின் உடல் பாகிஸ்தான் வந்தது

ஊரடங்கு தொடர்பிலான விசேட அறிவித்தல்

New Jaffna Commander assumes duties