உள்நாடு

மருதானை தீ விபத்தில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – மருதானை – சங்கராஜ மாவத்தையில், வர்த்தக நிலையமொன்றில் இன்று(24) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்த நபர் பலப்பிட்டியவைச் சேர்ந்த 46 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related posts

வேறு வழி இல்லாமல் நாடு திரும்பினார் கோட்டாபய

ஐ.தே.கட்சியின் தலைமைப் பொறுப்பு ஒரு இளம் உறுப்பினருக்கு

ஈரான் ஜனாதிபதியை சஜித் ஏன் சந்திக்கவில்லை? காரணம் வெளியானது