புகைப்படங்கள்

மரத்தில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- மஸ்கெலியா-தம்பேதன்ன பகுதியில், 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிந்தத ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது.

நேற்று காலை மஸ்கெலியா தம்பேதன்ன தோட்டத்தில், ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தையொன்று 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்தது.

இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஆஸி காட்டுத் தீ : கருகிய இடங்களில் துளிர்விடும் செடிகள்

தாய்வான் ஹெலி விபத்து

கடலில் கசிந்த எண்ணெய்