உள்நாடு

மரணத்தின் பின்னர் PCR பரிசோதனைகள் கட்டாயமில்லை

(UTV | கொழும்பு) – மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் இனி அவசியமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வீட்டிலோ அல்லது வைத்தியசாலைகளிலோ உயிரிழப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் அவசியமில்லையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தேவைப்படுமாயின் சட்ட வைத்தியரின் விருப்பத்துடன், பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சார சபை ஊழியர்கள் பணி இடைநீக்கம்!

 உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு : பெறுமதி 15,000 கோடி ரூபா

ரஞ்சன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்