உள்நாடுபிராந்தியம்

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம, மோட்டிங்ஹாம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

மோட்டிங்ஹாம் தோட்டத்தை சேர்ந்த 44 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான இராசமாணிக்கம் செல்வக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று (19) முற்பகல் 10.00 மணியளவிலேயே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகின்றது. மழைக்கு மத்தியிலும் இவர் விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார்.

அவ்வேளையில் கடும் காற்றால் மரக்கிளை முறிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts

நாட்டுக்கு மேலும் 500 மில்லியன் பைஃசர் தடுப்பூசி

பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து – பலர் காயம்

editor

சம்பிக்கவின் வழக்கிற்கு இடைக்கால தடையுத்தரவு