உள்நாடுபிராந்தியம்

மன்னார் துப்பாக்கிச்சூடு சம்பவம் – மேலும் ஒருவர் கைது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் வசிப்பவர் ஆவார்.

இந்நிலையில் விசேட அதிரடிப் படை மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Related posts

சம்மாந்துறை பகுதியில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

editor

தயாசிறி ஜயசேகரவின் தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு!

editor

சஜித் வெற்றிபெற முடியாது – தபால் வாக்குப்பதிவு தொடங்கியது நற்செய்தி கிடைத்துள்ளது – ஜனாதிபதி ரணில்

editor