வகைப்படுத்தப்படாத

மன்னாரில் 29 வயதான இளைஞர் கொலை

(UTV|COLOMBO)-மன்னாரில் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 8ம் திகதி 29 வயதான இளைஞர் ஒருவர், அவரது வீட்டில் வைத்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது கொலை எனத் தெரியவந்துள்ளது.

எனவே, மேலதிக விசாரணைகள் இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன்பொருட்டு கொழும்பில் இருந்து சென்ற இரகசிய பொலிஸின் விஷேட குழு, அப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்தனர்.

இவரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

VIP security personnel attack van in Kalagedihena

சிறுமியொருவருக்கு நடந்துள்ள கொடூரம்!!

රොබෝවරුන් නිසා 2030 දී රැකියා මිලියන 20 ක් අවදානමට