அரசியல்உள்நாடு

மன்னாரில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட கருத்து தொடர்பில் முறைப்பாடுகள் – கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இவ்வாறு ஆணைக்குழு ஊடகவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த நாளொன்றில் மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக வெளியிட்ட கருத்து தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.

அதன்படி, இந்தப் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக ஆணைக்குழு எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளது.

Related posts

சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா

editor

ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கைக்கு இலங்கை பதில்

சரத் வீரசேகர எம்பிக்கு எதிராக கண்டனப் போராட்டம் !