அரசியல்உள்நாடு

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்திய தேசிய மக்கள் சக்தி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று (12) மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் முஹமட் சாஜித் தலைமையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதேவேளை பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அஷேக் சதீக் முப்தி முசலி பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர் லெம்பட்

Related posts

கடற்படை உறுப்பினர்கள் 1,795 பேருக்கு பதவி உயர்வு

மீள ஆரம்பிக்கப்படும் கொக்குதொடுவாய் புதைகுழி அகழ்வு பணிகள்!

இலங்கை பொலிஸின் சமூக ஊடக கணக்குகள் மீது சைபர் தாக்குதல் – YouTube தவிர ஏனைய வலைத்தளங்கள் வழமைக்கு

editor