உள்நாடு

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை புத்தளம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் பதிவு

(UTV | கொழும்பு) – மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் பகுதியில் தங்கியுள்ளவர்களை இவ்வாண்டு புத்தளம் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அவர்கள் மன்னார் மாவட்டத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அது சரியானது இல்லை எனவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்வு

CEYPETCO விலையும் அதிகரிப்பு

ஹரீனின் Torch இனால் சபையில் அமைதியின்மை